தோல் புற்றுநோய் மேற்கத்திய மக்களுக்கு அதிகம் வரக்கூடிய புற்றுநோயாகும். தோல் நிறமிகளான மெலனில் (Melanin) இல்லாமல் வெண்மையாக இருப்பதால் கடுமையான வெயிலில் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கி இந்த புற்றுநோய் ஏற்படும்.
தொடர்ந்து வெயிலில் நிற்பவர்களுக்கு, அல்ட்ரா வயலட் (UVrays) கதிர்கள் பாதிப்பு ஏற்படும். தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த தழும்பில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம். (Marjolin's Ulcer)
பச்சைக்குத்துதல் எனப்படும் டாட்டூக்கள் போடுவதால் அதில் உள்ள ரசாயனம் காரணமாக உடலில், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் சில ரசாயனங்கள் தோலில் நெடுநாட்களாக தங்குவதால் தோலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரிய காரணமாக தோலில் புற்றுநோய் வரும். பொதுவாக உடம்பில் கை, கால் பகுதிகள் மற்றும் வெயில்படும் இதர இடங்களான முகத்தில் அதிகம் உருவாக வாய்ப்புண்டு.