நீ திரும்பிவரணும் தாயீ...!

நீ திரும்பிவரணும் தாயீ...!

ராமநாதபுரம் பெருநாழி கிராமத்தில் பிறந்தவர் வேல ராமமூர்த்தி. கல்லூரிப் படிப்புக்குப்பின் இராணுவத்திலும், பணி ஓய்வுக்குப்பின் தபால்துறையிலும் பணியாற்றியவர். வேல ராமமூர்த்தி கிழக்குச் சீமையின் அடிநிலை மக்களின் வாழ்வை அவர்கள் மொழியிலேயே சொல்லிச் செல்பவர். எழுதுவதோடு நின்றுவிடாமல் கூடியிருப்போரை இமைக்க மறந்து கேட்கவைக்கும் மேடைக் கதைசொல்லியாகவும் திகழ்கிறார். பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, கொரியன், மலாய் ஆகிய மொழிகளிலும் இவரின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது திரையுலகிலும் வலம் வரத் தொடங்கியுள்ளார். பேரன்பும், பெருங்கோபமும் என்பது இவரது கதைத் தொகுப்பின் பெயர் மட்டுமல்ல கதைகளின் குணாம்சமும்தான்.

Related Post