கடைத்தெருவின் கலைஞன்

கடைத்தெருவின் கலைஞன்

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரான ஆ.மாதவன் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். பள்ளி இறுதிப்படிப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு திருவனந்தபுரத்தின் சாலைக்கடைத்தெருவில் ‘செல்வி ஸ்டோர்’ என்ற பாத்திரக்கடைக்குச் சொந்தக்காரர் ஆனார். திருவனந்தபுரத்தின் இதயமாகக் கருதப்படும் பத்மநாபசுவாமி கோயிலின் எதிரேயுள்ள ‘சாலைக்கம்போளம்” எனும் சாலைக் கடைத்தெருவை தன்னுடைய படைப்புகளின் மூலம் அழியாக் கோலமாக்கியுள்ளார். கடைத்தெருவின் கலைஞன் என்ற செல்லப்பெயரும் இவருக்குண்டு.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ’கிருஷ்ணப் பருந்து’, ’தூவானம்’, ’புனலும் மணலும்’ என்று மூன்று நாவல்கள், ‘இனி நான் உறங்கட்டும்’, ‘சன்மானம்’ போன்ற மொழிபெயர்ப்புகள் ஆகியன தமிழ் இலக்கியத்திற்கு இவரின் பங்களிப்பாகும். ’இலக்கியச் சுவடுகள்’ எனும் நூலிற்காக 2015இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்கள்.

Read More ...

Related Post