கம்பீரத்தின் பெயர் ஜெயகாந்தன்

தமிழ்ச் சிறுகதை உலகை கம்பீரமாய் வலம் வந்தவர் ஜெயகாந்தன். அவரளவிற்கு வாசகர்களை பரவசப்படுத்திய எழுத்தாளர்கள் எவருமில்லை எனலாம். அந்தரங்கம் புனிதமானது, இருளைத் தேடி, மௌனம் ஒரு பாஷை, அக்கினிப் பிரவேசம், போன்ற கதைகள் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க நீண்ட நாட்களாயின. புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி போன்ற ஆரம்ப கால சிறுகதை ஜாம்பவான்கள் போல் மேற்கத்திய புனைகதைகளைப் படித்துப் பயிற்சி பெற்று வந்தவரல்ல. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்த ஜெயகாந்தன் முறையான கல்வி பெறும் வாய்ப்புகளற்று சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஊழியனாக வாழ்க்கையைத் தொடங்கியவர்.

Read More ...

Related Post