அனுமானங்களுக்கு அப்பால்

அனுமானங்களுக்கு அப்பால்

தன் வகுப்புத் தோழனாகிய மோகனின் சோகக் கதையைக் கேட்ட சிவபாலன் உருகிப்போனான். பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் படித்து வரும் மோகன் மீது அவனுக்கு கரிசனம் ஏற்பட்டது. அவ்வப்போது, "எங்க வீட்டிலிருந்து உனக்கு அனுப்பினாங்க.." எனச் சொல்லி மோகனுக்கு தின்பண்டங்களையும் பரிசு பொருட்களையும் அளித்து வந்தான் சிவபாலன். ஒருநாள் சிவபாலன் மோகனிடம் "எனக்கு உன்னை மாதிரி படிப்பு வரமாட்டேங்குது" என அலுத்துக் கொண்டான். திடீரென மோகனுக்குப் பொருட்கள் கொடுப்பதும் நின்று போனது. "தன் படிப்பு மீதான பொறாமையால்தான் சிவபாலன் தனக்கு தருவதை நிறுத்திவிட்டான்" என எண்ணினான் மோகன். சிவபாலன் மீதான வெறுப்பு பகையாக வேர்விட்டது. தொடர்ந்து சிவபாலனும் பத்து நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. காரணம் தெரியாமல் குழம்பினார்கள் வகுப்புத்தோழர்கள்.

Read More ...

Related Post