கடலளவு கைகோர்ப்போம்

கடலளவு கைகோர்ப்போம்

`கடவுள் உங்கள் முன்னால் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்றால் நீங்கள் என்ன கேட்பீர்கள்? என்று குழந்தைகளிடம் கேட்டார் அந்த ஆசிரியர். சாக்லெட், புத்தகம், பேனா, பென்சில், சைக்கிள், பொம்மை என்று அடுக்கிக் கொண்டே போயின குழந்தைகள். எதுவும் சொல்லாமல், அமைதியாக யோசித்துக் கொண்டிருந்த அந்தப் பத்து வயது சிறுமியிடம் உனக்கு எதுவும் வேண்டாமா?' என்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அச்சிறுமி `இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மொழிகளும் எனக்குப் பேசத் தெரிய வேண்டும்' எனக் கேட்பேன் என்றாள். ஆசிரியர் குழம்பிப் போனார். எதற்காக இந்த வரம் என்று அச்சிறுமியை கேட்ட ஆசிரியருக்கு, அவள் கூறிய பதில் `இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மொழி எனக்கு பேசத் தெரிந்திருந்தால், அவர்களின் மொழியிலேயே என்னால் நெருக்கமாக அன்பு செலுத்த முடியும் என்றாள் அச்சிறுமி புன்னகையோடு, நெகிழ்ந்து போனார் ஆசிரியர். அந்த சிறுமிதான் அன்னை தெரசா. உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாக நினைத்த புனிதர்.

Read More ...

Related Post